தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் தினமும் ஒரு நபருக்கு ‘ 2 ஃபுல்’ மட்டும்தான்!

 

தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் தினமும் ஒரு நபருக்கு ‘ 2 ஃபுல்’ மட்டும்தான்!

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே மதுபானக் கடையில் விற்பனை நேரத்தைக் குறைத்து தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று மதுபான விற்பனைக்கு கட்டுப்பாட்டுகள் விதித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி இரு மாநில எல்லைகளில் மது கடத்தலை தடுக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுபான கடத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறை, கலால்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் தினமும் ஒரு நபருக்கு ‘ 2 ஃபுல்’ மட்டும்தான்!

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கலால்துறை ஆணையர் சுதாகர், “புதுச்சேரியில் மதுக்கடத்தலை தடுக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் தனிநபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி, 4 லிட்டர் சாராயம் விற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபானம் கடத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மது குடித்துவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவதே தடுக்க தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது” எனக் கூறினார்.