‘சசிகலாவுடன் உரையாடினால் கட்சியில் இருந்து நீக்கம்’ – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

 

‘சசிகலாவுடன் உரையாடினால் கட்சியில் இருந்து நீக்கம்’ – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, புகழுக்கு இழுக்கும் அவப்பெயரும் ஏற்படும் படி நடந்து கொள்பவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘சசிகலாவுடன் உரையாடினால் கட்சியில் இருந்து நீக்கம்’ – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

மேலும், அதிமுக பேரியக்கமாக இருக்குமே தவிர ஒரு குடும்பத்திற்காக தன்னை ஒருபோதும் அழித்து கொள்ளாது என்றும் அதிமுக லட்சியங்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எனக்குப் பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் இருக்கும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்றும் அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சசிகலாவுடன் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன், சின்னசாமி உள்ளிட்ட 15 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.