• July
    22
    Monday

Main Area

Main



ரிசர்வ் வங்கியின் உபரி நிதி விவகாரம்! மீண்டும் அறிக்கையை தாமதப்படுத்திய பிமால் ஜலான் கமிட்டி! 

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Loading...

ரிசர்வ் வங்கி கையிருப்பாக எவ்வளவு நிதியை வைத்து கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்ய அமைக்கப்பட்ட பிமால் ஜலான் கமிட்டி தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்யவில்லை. தொடர்ந்து 4வது முறையாக பிமால் ஜலான் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்வதை தாமதப்படுத்தியுள்ளது.

மத்திய அரசனின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பது நாம் செலுத்தும் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் வரிதான். இதை தவிர்த்து மத்திய அரசு வேறு எந்த வகையில் வருமானம் வருகிறது என்று பார்த்தால் அரசு நிறுவனங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கும் டிவிடெண்ட் வாயிலாக வருகிறது. அதிலும் ரிசர்வ் வங்கி கொடுக்கும் தொகை கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

rbi

கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறை இலக்கை நிர்ணயித்த இலக்குகள் வைக்க மத்திய அரசு பெரிய போராட்டமே நடத்துகிறது. வருவாயை காட்டிலும் செலவு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். எனவே அதனை ஈடுகட்ட அதிக டிவிடெண்ட் தரும்படி நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்துகிறது. அதுதவிர ரிசர்வ் வங்கி கையிருப்பு மீதும் மத்திய அரசு ஒரு கண் வைத்தது. உபரியாக உள்ள நிதியை மத்திய அரசுக்கு தரும்படியும், நலிவடைந்த வங்கிகளுக்கு மூலதனமாக வழங்கும்படியும் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு மசியவில்லை. இதனையடுத்து ரிசர்வ் வங்கி கையிருப்பாக எவ்வளவு நிதியை வைத்து கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமால் ஜலான் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு நியமனம் செய்தது. இந்த கமிட்டியின் முதல் கூட்டம் நடைபெற்ற பிறகான 90 நாளில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது.

rbi

ஆனால் இந்த காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என 4வது முறையாக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இன்றும் பிமால் ஜலான் தலைமையிலான குழு தனது அறிக்கையை இன்றும் தாக்கல் செய்யவில்லை. 

ஆக, மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகுதான் பிமால்ஜலான் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிமால் ஜலான் தலைமையிலான குழுவின் அடுத்த கூட்டம் ஜூலையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.