ஏழைகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று நான் கூறியதை உறுதி செய்த ரிசர்வ் வங்கி! – ராகுல் காந்தி ட்வீட்

ஏழைகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று நான் கூறியதை உறுதி செய்த ரிசர்வ் வங்கி! – ராகுல் காந்தி ட்வீட்

ஏழைகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று பல மாதங்களாக நான் கூறி வந்ததை தற்போது ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதி உதவி நேரடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தி

ஏழைகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று நான் கூறியதை உறுதி செய்த ரிசர்வ் வங்கி! – ராகுல் காந்தி ட்வீட்

வருகின்றனர். ஆனால், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்படும். ஏழைகளுக்கு மூக்கடலை வழங்கப்படும் என்பதுடன் நிவாரண திட்டத்தை முடித்துக்கொண்டது.
இந்த நிலையில், “ஏழைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிதி உதவி செய்து, அவர்களை மீண்டும் வாங்கத்

ஏழைகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று நான் கூறியதை உறுதி செய்த ரிசர்வ் வங்கி! – ராகுல் காந்தி ட்வீட்

தொடங்கும்போதுதான் பொருளாதாரம் மேம்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த செய்தியை ராகுல் காந்தி ட்விட்டரில் ஷேர் செய்து பதிவிட்டுள்ளார்.

அதில், “கடந்த பல மாதங்களாக நான் எச்சரித்து வந்ததை ரிசர்வ் வங்கி தற்போது உறுதி செய்துள்ளது. அரசு இனி செய்ய வேண்டியது, அதிகமாக நிதி வழங்க வேண்டும், அதிகம் கடன் கொடுக்கக் கூடாது.

ஏழைகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று நான் கூறியதை உறுதி செய்த ரிசர்வ் வங்கி! – ராகுல் காந்தி ட்வீட்

தொழில் நிறுவனங்களுக்கான வரியை ரத்து செய்வதற்கு பதில், ஏழைகளுக்கு பணத்தை வழங்க வேண்டும்.
ஊடகங்களைத் திசைத் திருப்புவதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் கிடைத்துவிடாது. பொருளாதார பேரழிவுகளை மூடி மறைத்துவிட முடியாது” என்று கூறியுள்ளார்.