“ஹலோ அரசு சலுகை வேணுமா?” – போனில் ஒலிக்கும் மோசடி குரல்… எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

 

“ஹலோ அரசு சலுகை வேணுமா?” – போனில் ஒலிக்கும் மோசடி குரல்… எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

தொழில்நுட்பங்கள் வளர வளர நம் உலகம் சுருங்கி கொண்டிருக்கிறது. இது நிச்சயம் மகிழ்ந்து கொள்ளக்கூடிய விஷயம் தான். ஆனால் இதே தொழில்நுட்பத்தைக் கொண்டு உலகின் எந்த மூலையிலிருந்தும் மக்களை மிக எளிதாக மோசடி செய்துவிட முடிவதுதான் வேதனையைக் கூட்டுகிறது. தொழில்நுட்பம் குறித்து அறியாத மக்களிடம் வங்கி அலுவலர் போல நைச்சியமாக பேசி தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் வாங்கி மிரட்டுகின்றனர். தகவல்களின் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.

“ஹலோ அரசு சலுகை வேணுமா?” – போனில் ஒலிக்கும் மோசடி குரல்… எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

போன் செய்து வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு எண் என அனைத்தையும் உருவி அதன்மூலமும் பணம் பறித்துவருகின்றனர். தற்போது KYC மூலம் பணத்தை ஆட்டையை போடுகின்றனர். KYC (Known Your Customer) எனும் வாடிக்கையாளர்களைத் தெரிந்துகொள்ளும் படிவம் அனைத்து வங்கிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கொள்ளையர்கள் இதனை தங்களுக்குச் சாதகாமகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் எப்படியோ வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை தெரிந்துகொள்கிறார்கள். அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறுகிறார்கள்.

“ஹலோ அரசு சலுகை வேணுமா?” – போனில் ஒலிக்கும் மோசடி குரல்… எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

பின்னர் அரசு சலுகைகள் கிடைக்க வேண்டுமென்றால் KYC தகவல்களை தருமாறு கேட்கின்றனர். அப்பாவி மக்கள் அவர்களை நம்பி அதனைக் கொடுக்கின்றனர். அதற்குப் பிறகு லாவகமாக வங்கி கணக்கிலிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். இச்சூழலில் இதைத் தடுக்கும் பொருட்டு யாருக்கும் இதுபோன்ற தகவல்களைத் தர வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. வாடிக்கையாளரின் கேஒய்சி படிவத்தில் விவரங்கள் இல்லை என்றாலும் அது தொடர்பாக அவர் வங்கிக்கு நேரில் வரும்போது வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் இதற்காக டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.