ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்; இடைக்கால தடை விதிக்க மறுப்பு

 

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்; இடைக்கால தடை விதிக்க மறுப்பு

சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் மற்றும் நகைக்கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் மறு உத்தரவு வரும் வரை நகைக்கடன் வழங்கக்கூடாது என குறுஞ்செய்தி வந்ததாக கூறப்பட்டது.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்; இடைக்கால தடை விதிக்க மறுப்பு

இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக கூட்டுறவு சங்கம் சார்பில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி 4 வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.