‘லக்‌ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம்’ – ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

‘லக்‌ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம்’ – ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை திருப்பி அளிக்கும் அளவிற்கு லக்‌ஷ்மி விலாஸ் வங்கியிடம் பணம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக லக்‌ஷ்மி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நஷ்டம் அதிகரிப்பதால் வங்கியை மூடக்கூடிய அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அபார வளர்ச்சியை மீட்டெடுக்க வங்கி தரப்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும், எந்த பலனும் இல்லை. அதனால், லக்‌ஷ்மி விலாஸ் வங்கி தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

‘லக்‌ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம்’ – ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அதாவது வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை தான் எடுக்க முடியும் என்றும் அவசர தேவைகளுக்காக மட்டுமே ரூ.25 ஆயிரத்துக்கு மேல் கொடுக்கப்படும் என்றும் திடீர் அறிவிப்பு வெளியானது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், 2020ல் கடும் நிதி நெருக்கடியை சந்தித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் டிச.16 வரையிலே இந்த கட்டுப்பாடு தொடரும் என்றும் டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘லக்‌ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம்’ – ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், லக்‌ஷ்மி விலாஸ் வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம், முதலீட்டை திருப்பி அளிக்கும் வகையில் வங்கியிடம் பணம் உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக டி.என்.மனோகரனை நியமித்தது ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.