டீ, காபி கடைகளை திறக்க கோரிக்கை!

 

டீ, காபி கடைகளை திறக்க கோரிக்கை!

டீ, காபி கடைகளை திறக்க தமிழக அரசு மறு பரிசீலனை செய்யவேண்டுமென டீ, காபி வர்த்தகம் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

டீ, காபி கடைகளை திறக்க கோரிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊடங்கை அமல்படுத்தியுள்ளது. 11 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி வருகிறது. அதன்படி, மதுக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு அரசு நேரக்கட்டுப்பாடுடன் அனுமதி அளித்துள்ளது. ஆனால் டீ கடைக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் தனிநபர் விலகல் கடைபிடிக்க கடினமான மதுக்கடைகள், இறைச்சி கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில். அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி செயலப்படும் டீ கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், கடைக்கு வெளியே வாடிக்கையாளர்களை நிறுத்தி வியாபாரம் செய்யவும் தயார் எனவும் டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் டீக்கடை தொழிலில் ஈடுபட்டு இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் டீக்கடையை மட்டும் நம்பியே இருப்பதாகவும் டீக்கடை வர்த்தகம் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.