“உயிரிழந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குக” அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் கோரிக்கை!

“உயிரிழந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குக” அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் கோரிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

“உயிரிழந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குக” அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் கோரிக்கை!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு இதுதொடர்பாக தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், ” கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வர் தளபதி மு .க .ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

“உயிரிழந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குக” அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் கோரிக்கை!

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் முன்கள பணியாளர்களாக இருந்து சிகிச்சை வழங்கிய செவிலியர்களில் பலர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா சிகிச்சை பணியில் நேரடியாக அதிக நேரம் நோயாளிகளுடன் இருந்து சிகிச்சை வழங்குவது செவிலியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது போல செவிலியர்களின் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க மாண்புமிகு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.