முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் வைத்த கோரிக்கை

 

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் வைத்த  கோரிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து விசிக சார்பில் சில கோரிக்கை மனுக்களை அளித்தார் திருமாவளவன். தமிழகத்தைச் சார்ந்த சில
OBC சமூகங்களின் பெயர்கள் இந்திய ஒன்றிய அரசின் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அச்சமூகங்களின் மாணவர்கள் இந்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பயன்களைப்பெற இயலவில்லை. எனவே, அச்சமூகங்களை பட்டியலில் இணைக்க ஆவன செய்யக் கோரினார்.

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் வைத்த  கோரிக்கை

இதுகுறித்து முதல்வரின் அளித்த கோரிக்கை கடிதத்தில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்போடோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் சாதிகளின் பட்டியலில் பெரும்பாலானாவை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சில சாதிகளூம் , சீர்மரபினர் பட்டியலில் உள்ள ஒரு சாதியும் , ஒன்றிய அரசின் பட்டியலில் இடம்பெறவில்லை.

சேர்வை, அன்சார், ஆயிரவைசியர், சவுத்ரி, கள்ளர்குல தொண்டைமான், கன்னடியநாயுடு, கற்பூர செட்டியார், காசுக்கார செட்டியார், கொங்கு வைஷ்ணவ, குடிகார வெள்ளாளர், குக வெள்ளாளர், மூன்று மண்டல 84 ஊர் சோழிய வெள்ளாளர், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஒபிஎஸ் வெள்ளாளர், பல்யூர் கோட்ட வேளாளர், பொடிகார வேளாளர், பூலுவ கவுண்டர், ரெட்டி, ஷேக், சுந்தரம் செட்டி, சையத், உக்கிரகுல சத்திரிய நாயக்கர், உரிக்கார நாயக்கர், வேளார் ஆகிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதிகளும் சீர் மரபினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளசாதிகளில் சேர்வை( திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) என்னும் சாதியை ஒன்றிய அரசின் ஒபிசி பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் ஒன்றிய அரசு நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும்போது அவர்கள் பொதுப் பட்டியலிலேயே வைத்து கருதப்படுகின்றனர். அதனால் அவர்கள்தமது இட ஒதுக்கீட்டு உரிமையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் வைத்த  கோரிக்கை

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மபரபினர் பட்டியலில் உள்ள சாதிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர்பட்டியலில் இடம்பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுஅந்த 26 சாதிகளின் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்கும்படி வேண்டுகிறேன்.