ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

மும்பையில் கைதான ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

இண்டீரியர் டிசைனரான அன்வை நாயக் 2018-ம் ஆண்டு தந்து தாயாருடன் தற்கொலை செய்துகொண்டார் . இந்த வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நேற்று நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் நாயக்கின் மகள் அளித்த புகாரின் பேரில் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார் .

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

இதனிடையே கைது நடவடிக்கையின்போது பெண் காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் அர்னாப் மற்றும் அவரது மனைவி, மகன், மேலும் 2 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அத்துடன் அர்னாப் ஜாமீனில் விடுவிக்க கோரும் மனுவை இன்று நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

இந்நிலையில் மும்பையில் கைதான ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கைது நடவடிக்கையின்போது பெண் காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் அர்னாப் மற்றும் அவரது மனைவி, மகன், மேலும் 2 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அத்துடன் அர்னாப் ஜாமீனில் விடுவிக்க கோரும் மனுவை இன்று நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.