‘வாட்ஸப் மீது குவியும் புகார்’ ட்விட்டர் டிரெண்டிங்கில் #WhatsAppDown

 

‘வாட்ஸப் மீது குவியும் புகார்’ ட்விட்டர் டிரெண்டிங்கில் #WhatsAppDown

சமூக ஊடங்களில் தனித்த இடம் வாட்ஸப்க்கு உண்டு. ஒரு குழுவாக உரையாடுவதற்கான வசதி இருப்பதைப்போலவே இருவர் தனியே உரையாடுவதற்கு ஆடியோ / வீடியோ காலில் பேசிக்கொள்ளவும் பலரும் இதைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இதன் பயன்பாடு அதிகம். அதேநேரம் சில பிரச்னைகள் வந்தால் அதுவும் உலகிற்கே தெரிந்துவிடும்.

வாட்ஸப்பில் இப்போது வந்திருக்கும் பிரச்னை, லாஸ்ட் சீன் (last seen) ஆப்ஷனில் சிக்கல் மற்றும் தனிப்பட்ட விபரங்களை (privacy settings) மாற்றி அமைக்க முடியவில்லை. இதனால் வாட்ஸப் பயனளார்கள் புகார் மீது புகாராகக் கொடுத்து வருகின்றனர். இத்தனைக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டது நேற்று மாலைதான் அதற்குள் ஏராளமானவர்கள் புகார் அளித்துவருகின்றனர்.

‘வாட்ஸப் மீது குவியும் புகார்’ ட்விட்டர் டிரெண்டிங்கில் #WhatsAppDown

புகார் அளித்தவர்களில் 74 சதவிகிதத்தினர் லாஸ்ட் சீன் பிரச்னை என்றும் கனெக்ட் ஆகவில்லை என்று 21 சதவிகிதத்தினரும் லாகி இன் செய்ய முடியவில்லை என 3 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர். இந்த நிலையில் இது உலகளவில் ட்விட்டரில் டிரெண்டாகிவிட்டது.

‘வாட்ஸப் மீது குவியும் புகார்’ ட்விட்டர் டிரெண்டிங்கில் #WhatsAppDown

இந்திய அளவில் #WhatsAppDown என்றும் உலகளவில் #WhatsApp என்றும் ட்விட்டரில் டிரெண்டாகிவிட்டது. நெட்டிசன்களும் தங்களின் க்ரியேட்டிவிட்டியைக் காட்டி மீம்ஸ்களாகப் போட்டுக் குவித்துவருகின்றனர்.