கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்புக்கு வந்த நிருபருக்கு கொரோனா! – அதிர்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் – நிருபர்கள்

 

கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்புக்கு வந்த நிருபருக்கு கொரோனா! – அதிர்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் – நிருபர்கள்

தி.மு.க முதன்மைச் செயலாளர் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கே.என்.நேரு பேட்டியை எடுக்க வந்த நிருபர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், தி.மு.க நிர்வாகிகளும் நிருபர்களும் அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு படையெடுத்துள்ளனர்.
தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று திருச்சியில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி ஓரளவுக்கு விட்டு பேட்டி வழங்கப்பட்டது. கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, அச்சு ஊடக நிருபர்களை அழைக்காமல், உடனடியாக எல்லா இடத்துக்கும் சென்று சேர வசதியாக காட்சி ஊடக நிருபர்களை மட்டும் அழைத்து பேட்டி கொடுத்துள்ளார். ஏ.சி அறையில் சுமார் 25 நிமிடங்களுக்கு பேட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டி.வி நிருபர்கள், கேமரா மேன்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் என 20க்கும் மேற்பட்டோர் அந்த அறையில் இருந்துள்ளனர்.

கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்புக்கு வந்த நிருபருக்கு கொரோனா! – அதிர்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் – நிருபர்கள்
இந்த பேட்டியை முடித்துவிட்டு வெளியே வந்த நிருபர் ஒருவருக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சளி இருமல் காரணமாக கொரோனா உள்ளதா என்று பரிசோதனைக்கு மாதிரி கொடுத்துவிட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வந்த அழைப்பில் உங்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். எங்கு உள்ளீர்கள் என்று விசாரித்துள்ளனர். இந்த தகவல் மற்ற நிருபர்களுக்கும் தெரிய வரவே அதிர்ச்சியடைந்தனர்.


தி.மு.க நிர்வாகிகள், கே.என்.நேருவுக்கும் இந்த தகவல் சொல்லப்பட்டது. இதனால் அனைவரும் கொரோனா பாதிப்பு வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிலர் மருத்துவமனைக்கு சென்று தங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். கொரோனா தொற்று உறுதியாக, 4 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். வீட்டிலேயே சுய தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.