“நீட் பாதிப்பு குறித்து விரைவில் நீட்டான அறிக்கை” – ஆராய்ச்சி குழு தலைவர் ஏ.கே.ராஜன் உறுதி!

“நீட் பாதிப்பு குறித்து விரைவில் நீட்டான அறிக்கை” – ஆராய்ச்சி குழு தலைவர் ஏ.கே.ராஜன் உறுதி!

நீட் தேர்வுக்கு திமுக ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பின் நிச்சயம் நீட்டை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தது. தற்போது அதற்கான முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னும் நீட் தேர்வில் தங்கள் நிலைப்பாடு மாறப்போவதில்லை என திட்டவட்டமாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

“நீட் பாதிப்பு குறித்து விரைவில் நீட்டான அறிக்கை” – ஆராய்ச்சி குழு தலைவர் ஏ.கே.ராஜன் உறுதி!

அதன் முதல்படியாக ஒரு குழு அமைத்திருக்கிறார். நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராயவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவை நியமித்தார். அந்த குழு, நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆராய்வதோடு மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை அரசுக்கு பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். ஏ.கே.ராஜன் நீண்ட நாளாகவே நீட் தேர்வுக்கு எதிராகப் பேசிவரும் மிக முக்கிய ஆளுமை. அதனால் அவரது தேர்வு சரியானது என நீட் எதிர்ப்பாளர்கள் வரவேற்றனர்.

“நீட் பாதிப்பு குறித்து விரைவில் நீட்டான அறிக்கை” – ஆராய்ச்சி குழு தலைவர் ஏ.கே.ராஜன் உறுதி!

இன்று அக்குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. ராஜன், “நீட் தேர்வு குறித்த முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன. தமிழ்வழிக் கல்வி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து தரவுகளின் வழி அறிக்கை தாக்கல் செய்வோம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் எல்லோருடைய கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது என்பதுதான்.

“நீட் பாதிப்பு குறித்து விரைவில் நீட்டான அறிக்கை” – ஆராய்ச்சி குழு தலைவர் ஏ.கே.ராஜன் உறுதி!

பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது. எவ்வளவு தூரம் பாதிப்பு என்பதைத்தான் நாங்கள் ஆய்வு செய்வோம். ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிப்போம். மாணவர்களுக்கு தற்போது நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது. அடுத்த திங்கள்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்துவோம். இடைக்கால அறிக்கைகள் அளிக்க மாட்டோம். இறுதி அறிக்கை மட்டுமே அளிப்போம்” என தெரிவித்தார்.