பெரம்பலூரில் எக்ஸ்பயரி பீர் விற்பதாக புகார்! - குடி மகன்கள் அதிர்ச்சி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபெரம்பலூரில் எக்ஸ்பயரி பீர் விற்பதாக புகார்! - குடி மகன்கள் அதிர்ச்சி

காலாவதியான பீர்
காலாவதியான பீர்

பெரம்பலூரில் காலாவதியான பீர் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதனால், குடி மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் மதுக்கடைகளை நம்பித்தான் தமிழக அரசே உள்ளது. அந்த அளவுக்கு டாஸ்மாக் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. காலியாக காலியாக மது வகைகளைக் கொண்டுவந்து நிரப்பிக்கொண்டே இருக்கின்றனர். அதிக அளவில் குடி மகன்கள் வந்து மது வகைகளை வாங்குவதால் ஜில் பீர் கிடைப்பதில்லை என்றும் கூட பலர் புலம்புகின்றனர்.

beer

இந்த நிலையில் பெரம்பலூரில் ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் காலாவதியான பீர் விற்கப்பட்டதாக வெளியான தகவலால் குடி மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உப்போடை என்ற இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. கடந்த 19ம் தேதி ஒருவர் இந்த கடையில் பீர் வாங்கி அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் நாக்கில் அரிப்பு. தொண்டையில் எரிச்சல் ஏற்படவே தான் வாங்கிய மது பாட்டலில் எக்ஸ்பயரி தேதியை சரி பார்த்துள்ளார். அதில் 2019 ஏப்ரல் 12ம் தேதி தயாரிக்கப்பட்டது என்றும், தயாரித்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இதை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் டாஸ்மாக் கடைக்காரரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அலட்சியமாக எல்லாம் நல்ல பீர்தான் என்று கூறியுள்ளனர்.

tasmac

இதைத் தொடர்ந்து காலாவதியான பீர் பாட்டலின் ஸ்டிக்கரை படம் எடுத்து வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டு டாஸ்மாக் எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது என்று புலம்பினார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. 

beer

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது, "மாவட்டத்துக்கு மதுபான வகைகள் வந்தவுடன் உடனுக்குடன் விற்பனையாகிவிடுகிறது. இதனால், பழைய ஸ்டாக் எதுவும் எங்களிடம் இல்லை. டாஸ்மாக்கில் பழைய ஸ்டாக் தங்கி, கடைகளுக்கு செல்ல வாய்ப்பே இல்லை. விற்பனையாளர் ஏதேனும் செய்திருக்கலாம். இது குறித்து கடையில் பணியில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
தற்போது பெரம்பலூர் பகுதி குடி மகன்கள் உஷாராவிட்டனர். எக்ஸ்பயரி தேதியை சரி பார்த்தே வாங்க ஆரம்பித்துவிட்டனர் என்று கூறுகின்றனர் டாஸ்மாக் கடை ஊழியர்கள்.

2018 TopTamilNews. All rights reserved.