1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியத் தகவல்!

 

1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியத் தகவல்!

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 30ம் தேதி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்து இன்று வரை மாணவர்கள் சிலருக்கு கொரோனா உறுதியாகி வரும் நிலையிலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தியது.

1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியத் தகவல்!

நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி (இன்று) முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் கேரளாவை ஒட்டி இருப்பதால் அந்த மாவட்டங்களில் பள்ளிகளை திறப்பது சந்தேகம் தான் என்றும் முதல்வர் வல்லுனர்களுடன் பேசி முடிவு எடுப்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.

1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியத் தகவல்!

இந்த நிலையில், 1 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி 30ம் தேதி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக 30ம் தேதி நடக்கும் ஆலோசனையில் பள்ளி திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும். நடுநிலை பள்ளிகளை திறப்பது பற்றி முதல்வர் அலுவலகத்திற்கு இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வெவ்வேறு கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.