சிறுமியின் கடிதம்…களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்

 

சிறுமியின் கடிதம்…களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்

பள்ளியை சீரமைக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு 8 வயது சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரின் மகள் 8 வயது அதிகை முத்தரசி. 8 வயது மாணவி தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க கோரியும், பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி பலமுறை ஆட்சியர் இடத்தில் மனு அளித்தார். இதுதொடர்பாக 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசு வரட்டு கவுரவம் பார்க்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து, புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

சிறுமியின் கடிதம்…களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து மாணவிக்கு பள்ளி மற்றும் அரசு தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரது தந்தை மாணவியை பள்ளியைவிட்டு நிறுத்தி, வேறு ஒரு தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார். அதேசமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீர்கேடு தொடர்பாக புதிய பள்ளி கட்டிடம் கட்ட நீதிமன்றம் சொல்லி ஓராண்டு ஆகியும் பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறுமியின் கடிதம்…களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து சிறுமி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சிறுமியின் கடிதத்தை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருவள்ளூர் பொன்னேரி அமைந்துள்ள பள்ளிக்கு சென்று பார்வையிட்டதுடன், மாணவி அதிகை முத்தரசி இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்த உள்ளார்.