15,000 பேரை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு!

 

15,000 பேரை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு!

கொரோனா பரவலால் உலகம் முழுக்க மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் தங்கள் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் கால் டாக்சி நிறுவனமான ஓலா தனது நிறுவனத்தில் இருந்து 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதேபோல் உபர் நிறுவனமும் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

15,000 பேரை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு!

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கார் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டதால் கடும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. அதனால் பொருளாதார சரிவை சமாளிப்பதற்காக பிரபல நிறுவனமான ரெனால்ட் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. சுமார் 15,000 பேரை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவையடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் செலவு குறைப்புத் திட்டம் முக்கியமானதாக இருப்பதாக இடைக்கால தலைமை செயல் அதிகாரி குளோடில்ட் டெல்போஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதன்மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.16 கோடி செலவை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிரான்சில் உள்ள நான்கு உற்பத்தி தொழிற்சாலைகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.