’தோனியை CSK விலிருந்து நீக்குங்க’ முன்னாள் வீரர் யோசனை

 

’தோனியை CSK விலிருந்து நீக்குங்க’ முன்னாள் வீரர் யோசனை

ஐபிஎல் போட்டிகள் முடிந்தும் அதன் பரபரப்பு இன்னும் முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவானதிலிருந்து ஒரே கேப்டன் தோனிதான். மூன்று முறை இந்த அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்றுகொடுத்தவர். இரு முறை சென்னை அணி ஆட முடியாமல் போனபோதும் மீண்டும் இந்த அணிக்காக ஓடோடி வந்தவர்.

’தோனியை CSK விலிருந்து நீக்குங்க’ முன்னாள் வீரர் யோசனை

இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதலே சென்னை அணிக்கு பெரும் சிக்கல்தான். போட்டி ஆரம்பிக்கும் முன்பே ரெய்னா, ஹர்பஜனும் அணியிலிருந்து விலகி விட்டனர். அடுத்து, அணியில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், பல வீரர்கள் ஃபார்மிலேயே இல்லை. இன்னும் பல காரணங்களால் இம்முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூட சென்னை அணியால் செல்ல முடியவில்லை. இதனால், சென்னை கேப்டன் தோனி குறித்த விமர்சனம் எழுந்து வருகிறது.

’தோனியை CSK விலிருந்து நீக்குங்க’ முன்னாள் வீரர் யோசனை

முன்னாள் கிரிக்கெட்டர் ஆகாஷ் சோப்ரா ஒரு நேர்காணலில், “சென்னை அணியிலிருந்து தோனியை விடுவிக்க வேண்டும். ஏனெனில் இப்போது தக்க வைத்தால் மூன்று ஆண்டுகளுக்கு அவரை சென்னை வைத்திருக்க வேண்டும். ஆனால், தோனி இன்னும் மூன்று ஆண்டுகள் போட்டியில் ஆடுவாரா என்பது தெரியாது. அதனால் இப்போது தோனியை விடுவித்து விட்டு, மெகா ஏலத்தில் மேட்ச் கார்டு எனும் வகையில் தோனியை சென்னை அணிக்கு திரும்ப கொண்டு வந்துவிட முடியும். இதனால், அணி நிர்வாகத்தில் செலவு மிச்சமாகும்” என்று யோசனை தெரிவித்திருக்கிறார்.

’தோனியை CSK விலிருந்து நீக்குங்க’ முன்னாள் வீரர் யோசனை

மேலும், “கடைசி நேரத்தில் அணியை விட்டுச் சென்ற ரெய்னா மற்றும் ஹர்பஜனை மீண்டும் அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்’ என்றும் கூறியுள்ளார்.