“இந்திய கொரோனா வைரஸ்” என்று சொல்லாதீர்கள்… உடனே நீக்குங்கள் – மத்திய அரசு எச்சரிக்கை!

 

“இந்திய கொரோனா வைரஸ்” என்று சொல்லாதீர்கள்… உடனே நீக்குங்கள் – மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா முதல் அலையின்போது ஒரே மாதிரியான வைரஸே உலகம் முழுவதும் பரவலுக்குக் காரணமாக அமைந்தது. ஆனால் இரண்டாம் அலையில் பல்வேறு வகையான உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்கள் உருவாகி பரவ தொடங்கின. வைரஸ்களின் இயல்பே தங்களை உருமாற்றம் செய்துகொள்வது தான். அவ்வாறு உருமாறும்போது அதன் தீவிரமும் பரவும் வேகமும் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். இதேபோல பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ்கள் உருமாற்றமடைந்தன.

“இந்திய கொரோனா வைரஸ்” என்று சொல்லாதீர்கள்… உடனே நீக்குங்கள் – மத்திய அரசு எச்சரிக்கை!
“இந்திய கொரோனா வைரஸ்” என்று சொல்லாதீர்கள்… உடனே நீக்குங்கள் – மத்திய அரசு எச்சரிக்கை!

இந்த வைரஸ்களுக்கு தனியாக பெயர்கள் இருந்தாலும் பொதுவாக அந்தந்த நாடுகளைக் குறிப்பிட்டு பிரிட்டன் வைரஸ், இந்திய வைரஸ் என்றே அழைக்கப்பட்டது. சர்வதேச ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் என அனைத்தும் இம்மாதிரியான வார்த்தைகளைப் பிரயோகித்து வந்தன. அதேபோல பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் இதேபோன்று இந்திய வகை உருமாற்றமடைந்த வைரஸ் என குறிப்பிட்டிருந்தன. இப்படி அழைப்பது சர்வதேச அளவில் இந்தியாவின் புகழைக் களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

இச்சூழலில் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில், “உலக சுகாதார அமைப்பு வெளியிடும் அறிக்கைகளில் உருமாற்றமடைந்த பி.1.6.17 (இந்தியாவில் பரவும் வைரஸ்) எனும் வைரஸின் தீவிரம் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேபோல மற்ற நாடுகளில் உருமாற்றமடைந்த வைரஸ்களுக்கும் இம்மாதிரியான அறிவியல் பெயர்களைக் கொண்டு குறிப்பிடுகிறது. ஆனால் எங்கேயும் இந்திய உருமாற்றமடைந்த வைரஸ் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுத்துவது மிகவும் தவறானது. ஆகவே உங்களது தளங்களிலிருந்து இதனை நீக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.