தேனியில் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

 

தேனியில் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்த நடவுசெய்த மரங்களை இன்று போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தேனியில் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் பஞ்சம்தாங்கி கண்மாய், பெரியகுளம், செங்குளம், கெங்கன்குளம், உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான கண்மாய்கள் உள்ளன. இவற்றை பொதுப்பணித்துறை மற்றும் மயிலாடும்பாறை ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கண்மாய்களில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, இலவம், பலா உள்ளிட்ட மரங்களை பயிரிட்டு வளர்த்து வருவதாக புகார் எழுந்தது.

தேனியில் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

இதனை அடுத்து, இந்த கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணியை நேற்று அரசு அதிகாரிகள் தொடங்கினர். இதனையொட்டி, வருசநாடு பஞ்சம் தாங்கி கண்மாயில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகரன், மயிலாடும்பாறை யூனியன் ஆணையாளர்கள் முத்துப்பாண்டி உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். இதுகுறித்து பேசிய கிராம மக்கள், பஞ்சம்தாங்கி கண்மாய் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வருசநாடு ஊராட்சியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இனி குடிநீர் பஞ்சம் வராது என தெரிவித்தனர்.