காலியாகும் தலைமை செயலகம்; அமைச்சர்கள் பெயர் பலகைகள் அகற்றம்!

 

காலியாகும் தலைமை செயலகம்;  அமைச்சர்கள் பெயர் பலகைகள் அகற்றம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்கிறது. திமுகவின் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஸ்டாலின், ஓரிரு நாளில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த தருணத்திற்காக கோடான கோடி திமுகவினர் காத்து கிடக்கின்றனர்.

காலியாகும் தலைமை செயலகம்;  அமைச்சர்கள் பெயர் பலகைகள் அகற்றம்!

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிமுகவுக்கு எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதிமுகவில் இருந்த 27 அமைச்சர்களில் 11 பேர் தோல்வி அடைந்துள்ள நிலையில் 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ,ஓ பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் ,செங்கோட்டையன் ,செல்லூர் ராஜூ ,தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, அன்பழகன், கருப்பணன் ,காமராஜ் ,ஓ.எஸ். மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர்,கடம்பூர் ராஜு,ஆர்.பி.உதயகுமார் , சேவூர் ராமச்சந்திரன் என 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும் சி.வி. சண்முகம், வீரமணி, ஜெயகுமார் ,எம்.சி. சம்பத், நடராஜன், ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின், பாண்டியராஜன், ராஜலட்சுமி, சரோஜா, எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அறையில் இருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளது. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகளை காலி செய்யக்கூடிய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.