கட்சி கொடிகள் அகற்றம்; பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிப்பு!

 

கட்சி கொடிகள் அகற்றம்; பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிப்பு!

ஆண்டிபட்டியில் கட்சிக் கொடி வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அனைத்து கட்சிக் கொடிகளையும் போலீசார் அகற்றினர்.

கட்சி கொடிகள் அகற்றம்; பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே அனைத்து கட்சிகள் சார்பில் கொடிகம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தை புதுப்பிக்க அங்கு பீடம் அமைக்கப்பட்டது. இதற்கு பார்வர்டு பிளாக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பார்வர்டு பிளாக் கட்சியினர் தங்கள் கட்சியின் கொடியை நடுவதற்காக புதிய கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சி கொடிகள் அகற்றம்; பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிப்பு!

இதையறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் தேமுதிக சார்பில் வைக்கப்பட்டுள்ள பீடத்தை முதலில் அகற்றுங்கள் என பார்வர்டு பிளாக் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபப்பட்டனர் . இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் அனைத்து கட்சியினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கு எந்த கட்சி கொடியையும் வைக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் பொக்லைன் இயந்திரம் கொண்டு அங்கு வைக்கப்பட்ட அனைத்து கொடி கம்பங்களும் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.