கண்கள் சிவந்து நீர் வழிந்தால் என்ன செய்யலாம்?

 

கண்கள் சிவந்து நீர் வழிந்தால் என்ன செய்யலாம்?

பருவநிலை மாற்றங்களின்போது உடல் உபாதைகள் வருவது வாடிக்கை. பகலில் வெயில் இரவில் மழை என வெப்பமும், குளிர்ச்சியும் மாறி மாறி வந்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. வழக்கமான உணவைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஏன்… வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிறது, கண்கள் பொங்கிக்கொண்டு சிவந்து நீர் வடிகிறது, வலிக்கிறது என்று சொல்பவர்களைப் பார்த்திருப்போம்.

கண்கள் சிவந்து நீர் வழிந்தால் என்ன செய்யலாம்?கண்ணில் நீர்…
கோடைக்காலங்களிலும் அதையடுத்து வரும் காலங்களிலும் பலருக்கு கண் நோய்கள் வந்து பாடாய்ப்படுத்தும். இதுபோன்ற நேரங்களில் நாம் நம் உடல்நிலையை அறிந்து அதற்கேற்ற உணவுகளை உண்ண வேண்டும். கூடவே, வேறு சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

கண்கள் சிவந்து, வீங்கிய நிலையில் நீர் வழிந்தால் நந்தியாவட்டைப் பூக்களை கண்களின்மீது வைத்து கட்டி வந்தாலே சரியாகிவிடும். ஒற்றை நந்தியாவட்டை அல்லது அடுக்கு நந்தியாவட்டை என எதுவாக இருந்தாலும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும்போது கண்களின்மீது பூக்களை வைத்து மெல்லிய துணியால் கண்களைக் கட்ட வேண்டும். இப்படிச் செய்தால் சில மணிநேரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

கண்கள் சிவந்து நீர் வழிந்தால் என்ன செய்யலாம்?எண்ணெய்க் குளியல்:
அதேபோல் மஞ்சள் தூளை நீரில் நன்றாகக் கரைத்து ஒரு மெல்லிய துணியை (பருத்தித் துணியாக இருந்தால் நல்லது) அதில் நனைத்து நிழலில் காய வைக்க வேண்டும். அதன்பிறகு கைக்குட்டையைப் பயன்படுத்துவதுபோல அவ்வப்போது கண்களைத் துடைத்து வந்தாலும் கண்ணில் உள்ள கிருமிகள் பரவாமல் தடுக்கப்படும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறைந்து இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். எண்ணெய்க் குளியல் சளியையும் விரட்டும். ஆனால், முறைப்படி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். சூட்டைக் குறைக்கவும் சளி, ஜலதோஷம் இருந்தால் அதைக் கட்டுப்படுத்தவும் நல்லெண்ணெய்க் குளியல் நல்லது.

கண்கள் சிவந்து நீர் வழிந்தால் என்ன செய்யலாம்?தூக்கம்:
நல்லெண்ணெயை தேவையான அளவு எடுத்து அதில் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் உள்ள எண்ணெயை தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
எண்ணெய்க் குளியலின்போது வெதுவெதுப்பான நீராக இருக்க வேண்டியது அவசியம்.

எண்ணெய்ப் பிசுக்கினைபோக்க சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும். மேலும், நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மூட்டு வலி, உடல் வலி நீங்கி நிம்மதியான தூக்கம் வரும். காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள் அன்று பகலில் மட்டும் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
பகல் உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

சூடு அதிகமாக இருந்தால் இரவு தூங்கும்போது உச்சந்தலை, தொப்புள், கால் பெருவிரலில் விளக்கெண்ணெய் வைத்து தூங்குவது நல்லது. உடலின் நிலையை அறிந்து அதற்கேற்ற உணவுகளை உண்பதுடன் மேலே சொன்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.