#BigBreaking கொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்!

 

#BigBreaking கொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சமயத்தில் ரெம்டெசிவிர் என்ற மருந்து உயிர் காக்கும் மருந்தாக மருத்துவர்களால் சொல்லப்பட்டது. கொரோனா நோயாளிகளை அனுமதித்ததும் அவர்களின் உறவினர்களிடம் ரெம்டெசிவிர் மருத்து வாங்கி வருமாறு மருத்துவர்கள் நிர்பந்தித்தனர். முதல் பரவலின்போதே ரெம்டெசிவிர் மருந்துக்குப் பெரிதும் தட்டுப்பாடு நிலவியது. அப்போதே ஏராளமானோர் வாங்கி ஸ்டாக் வைத்துள்ளார்கள்.

#BigBreaking கொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்!

அதற்குப் பின் அம்மருந்து கொரோனாவைக் குணப்படுத்தாது; ஆய்வு முடிவிலும் அது பற்றி கூறப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவிட்டனர். ஆனால் இப்போதும் கூட ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதற்கான டிமாண்ட் அதிகரிப்பதால் விடிய விடிய கால் கடுக்க நின்று மருந்தை வாங்கிச் செல்கிறார்கள். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பல ஆயிரக் கணக்கில் ரெம்டெசிவிர் மருந்தை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

#BigBreaking கொரோனா சிகிச்சை மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்!

உலக சுகாதார அமைப்பே ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு மிக முக்கியமான மருந்து என்று சொல்லவில்லை. அதுபோல ரெம்டெசிவிர் மருந்து கொரோனா உயிர்சேதத்தை குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் ரெம்டெசிவிர் இல்லாமலேயே கொரோனா நோயாளிகளை சிறப்பாக குணப்படுத்தி வருகிறோம் என ஒருசில மருத்துவர்கள் கூறினர். இதுதொடர்பாக தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டதால் உலக சுகாதார அமைப்பு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலிலிருந்து ரெம்டெசிவிரை நீக்கியுள்ளது.