Home தமிழகம் ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்...எப்படி தெரியுமா?

ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்…எப்படி தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 33,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,63,129 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பால் நேற்று 335 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,005 ஆக அதிகரித்துள்ளது.

ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்...எப்படி தெரியுமா?
ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்...எப்படி தெரியுமா?

இந்த சூழலில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அல்லல்பட்டு வந்தனர். நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்றும் மருந்து கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வந்தனர். இதனால் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 6 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்...எப்படி தெரியுமா?

அத்துடன் இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இன்று முதல் (மே 18)அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகள்மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் ரெம்டெசிவர் மருந்து தேவை குறித்த கோரிக்கைகளுடன் இணையத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்...எப்படி தெரியுமா?

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மூலமாகவே வாங்க இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம்.

ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்...எப்படி தெரியுமா?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கணவனை தட்டிக்கேட்ட மனைவி வெட்டிக் கொலை!

கடலூர் மாவட்டம், புவனகிரியில் கணவன் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தட்டிக்கேட்ட மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார் கீழ்புவனகிரியை...

13-6-2021 – ஞாயிறு ராசி பலன்!

பிலவ வருடம் I வைகாசி 30 I ஞாயிற்றுக்கிழமை I ஜூன் 13, 2021 இன்றைய...

ஆண்மைக்குறைவு மணமகனால் அவதிப்பட்ட மணமகள் -கல்யாணத்திற்கு மறுநாள் எடுத்த அதிரடி முடிவு

புதிதாக கல்யாணமான ஒரு பெண் தனது கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பதை மறைத்து கல்யாணம் செய்து வைத்ததாக போலீசில் புகார் கூறினார்

எனக்கு உங்க பாதுகாப்பு வேண்டாம்.. திரும்ப பெற்றுக்கோங்க.. உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய முகுல் ராய்

திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்த முகுல் ராய், தனக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நம் நாட்டில்...
- Advertisment -
TopTamilNews