ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது நடத்தப்படும்? – கங்குலி பதில்!

 

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது நடத்தப்படும்? – கங்குலி பதில்!

கொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தது. இம்முறையும் பிசிசிஐக்கு கடும் சவால் காத்திருந்தது. மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

It was mentally tough in bio-bubble: Sourav Ganguly thanks players for  commitment to IPL success | Cricket News - Times of India

வெற்றிகரமாக பாதி போட்டிகள் நடந்துமுடிந்திருந்த நிலையில் கொரோனா தனது வேலையைக் காட்டியது. அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள்ளும் கொரோனா நுழைந்தது. வருண் சக்கரவர்த்திக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்ததாக சந்தீப் வாரியார், சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, சிஇஓ காசி விஸ்வநாதனுக்கும் தொற்று கண்டறியப்பட்டது. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது நடத்தப்படும்? – கங்குலி பதில்!

மீண்டும் எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடரும், எங்கு நடத்தப்படும் என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “நடப்பு ஐபிஎல் தொடரை நடத்தவில்லை என்றால் பிசிசிஐக்கு 2,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதனால் நிச்சயமாக ஐபிஎல் போட்டி மீண்டும் நடத்தப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இந்தியா தற்போது இருக்கும் நிலையில் இங்கே ஐபிஎல் போட்டி நடத்துவது சாத்தியமற்ற ஒன்று. மீண்டும் அரபு நாடுகளில் நடத்தலாமா என ஆலோசித்து வருகிறோம். மிக விரைவில் எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் என்பதை அறிவிப்போம்” என்றார்.