விடுபட்ட 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து – முதல்வர் அறிவிப்பு

 

விடுபட்ட 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து – முதல்வர் அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் ஜூன் 15 முதல் தேர்வு நடக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன் படி தேர்வுக்கு மையங்கள் அமைக்கும் பணி, மாணவர்களை பத்திரமாக அழைத்து வர பேருந்துகள் ஏற்பாடு செய்யும் பணி என அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே மீதமுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விடுபட்ட 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து – முதல்வர் அறிவிப்பு

ஆனால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால், இந்த தேர்வு நடத்துவதின் மூலம் பல மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருந்தது. இதன் காரணமாக தேர்வை ரத்து செய்து மாணவர்களை ஆல்பாஸ் ஆக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து மீதமுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.