ஐபிஎல் ரசிகர்களே தயாரா?… நடக்காத போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் – அறிவித்தது பிசிசிஐ!

ஐபிஎல் ரசிகர்களே தயாரா?… நடக்காத போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் – அறிவித்தது பிசிசிஐ!

கொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தது. இம்முறையும் பிசிசிஐக்கு கடும் சவால் காத்திருந்தது. மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஐபிஎல் ரசிகர்களே தயாரா?… நடக்காத போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் – அறிவித்தது பிசிசிஐ!

வெற்றிகரமாக பாதி போட்டிகள் நடந்துமுடிந்திருந்த நிலையில் கொரோனா தனது வேலையைக் காட்டியது. அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள்ளும் கொரோனா நுழைந்தது. வருண் சக்கரவர்த்திக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்ததாக சந்தீப் வாரியார், சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, சிஇஓ காசி விஸ்வநாதனுக்கும் தொற்று கண்டறியப்பட்டது. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

ஐபிஎல் ரசிகர்களே தயாரா?… நடக்காத போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் – அறிவித்தது பிசிசிஐ!

போட்டிகளைத் தற்காலிகமாகவே நிறுத்திவைத்ததே தவிர முழுவதுமாக ரத்து செய்யப்படும் என எங்கேயும் பிசிசிஐ தெரிவிக்கவில்லை. இதனால் எஞ்சிய போட்டிகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகமாவதால் இங்கே நடத்தப்படாது என திட்டவட்டமாக அறிவித்தார் தலைவர் கங்குலி.

ஐபிஎல் ரசிகர்களே தயாரா?… நடக்காத போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் – அறிவித்தது பிசிசிஐ!

இச்சூழலில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என கூறப்பட்டது. தற்போது பிசிசிஐ அதனை உறுதிசெய்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா, இந்தாண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும், எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாகவும் தெரிவித்தார். விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.