Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் 10 வித நோய்களை விரட்டும் ‘”ரஜினி’யின் பாபா முத்திரை

10 வித நோய்களை விரட்டும் ‘”ரஜினி’யின் பாபா முத்திரை

“பாபா” படத்தில் ரஜினியின் முக்கிய ஸ்டைல்… இரண்டு விரல்களை உயர்த்தி மூன்று விரல்களை மடக்கிப் பிடிப்பதுதான்.. இதன் பெயர் அபான முத்திரை ஆகும். இது மிகவும் எளிதான முத்திரை என்பதோடு உடலுக்கு பல நண்மைகளும் செய்வதாகும்.


யோகாவில், ஆசனங்கள், பிரணாயாமம், தியானம், கிரியா மற்றும் முத்திரை ஆகிய ஐந்து பயிற்சிகள் மிக முக்கியமானவை. அவற்றில், ‘முத்திரை’ என்பது கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு பயிற்சிமுறை.இதில் முக்கியமான ஒரு முத்திரை ‘அபான வாயு’ முத்திரை ஆகும்..
உங்கள் மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு லேசாகத் தொடவேண்டும். மற்ற இருவிரல்களும் மேலே நீட்டியபடி இருக்க

வேண்டும்.இதுதான் அபான முத்திரை. இதனை உட்கார்ந்து கொண்டோ ,நின்று கொண்டோ செய்யலாம்.எவ்வளவு நேரமும் செய்யலாம். எங்கும் செய்யலாம்.
நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் ஏராளமான வேதியியல் பொருட்கள் கலந்துள்ளன.இதனால் உடலில் தேவையற்ற நச்சுகள் தங்கிவிடுகின்றன. இதனை மாத்திரை, மருந்துகள் இல்லாமல் எளிய வழியில் வெளியேற்ற இந்த அபான வாயு முத்திரை மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலில் தேங்கியுள்ள நச்சுககளால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அபான வாயு முத்திரை, வயிற்றில் உள்ள தேவையில்லாத நச்சுககளை வெளியேற்றி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில் கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையில் நிலம், நெருப்பு ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.


வயிறு மற்றும் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். மேலும் பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல்,

மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும். மூக்கடைப்பு தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.மூலம், சர்க்கரை நோய். இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இது. மனம் தொடர்பான பிரச்னைகளையும் இது சரிசெய்யும். கணையத்தில் உள்ள தேவையற்றக் கழிவுகளை நீக்கி இன்சுலின் உற்பத்திக்கு வழிவகுக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் இதனைச் செய்யக் கூடாது. இர.போஸ்

மாவட்ட செய்திகள்

Most Popular

மேற்கு வங்க மக்கள் பயத்தில் உள்ளனர்.. மத்திய படைகளை குவியுங்க.. தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. கோரிக்கை

மேற்கு வங்க மக்கள் பயத்தில் உள்ளதால் விரைவாக மத்திய படைகளை குவியுங்க என்று இந்திய தேர்தல்ஆணையத்திடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்...

அதானி துறைமுகம் விவகாரம்… மோடி தனது முதலாளித்துவ நண்பர்களிடம் நாட்டை ஒப்படைப்பது தொடர்கிறது.. ராகுல்

அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க பணிகளை குறிப்பிட்டு, மோடி தனது முதலாளித்துவ நண்பர்களிடம் நாட்டை ஒப்படைப்பது தொடர்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

அரசியலுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… மத்திய அமைச்சர் வேதனை

அரசியல் காரணங்களுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று கட்சியை மத்திய அமைச்சர் ஹா்ஷ் வர்தன் தெரிவித்தார். நாடு முழுவதுமாக அனைத்து...

உத்தர பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?.. 10 லட்சம் பிரியங்கா காந்தி பட காலண்டர் விநியோகம்

2022 உத்தர பிரதேச தேர்தலை மனதில் வைத்து, மக்களை சென்றடையும் நோக்கில், அம்மாநில நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீடு வீடாக சென்று பிரியங்கா காந்தி பட காலண்டரை விநியோகம் செய்ய...
Do NOT follow this link or you will be banned from the site!