கொரோனா தொற்றால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை!

கொரோனா தொற்றால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,175 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,73, 460 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு நிவாரண தொகை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை!

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா 25லட்சம் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 28 பேர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது . மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி , செங்கல்பட்டு மருத்துவமனை டீன் சுகுமாரன் குடும்பத்திற்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.