புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதி

 

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கொலை செய்யப்படும் சம்பவம் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதி

போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் சிறுமி உடலை நாளை காலை 8 மணிக்கு பெற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தனர். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் சீர்உதவி தொகையாக ரூ 8.25 லட்சம் சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக நாளை காலை அவர்கள் சிறுமியின் சடலத்தை பெற்றுக் கொண்டதும் ரூ 4.12 லட்சமும் அதன் பின்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது 4.13 லட்சமும் வழங்கப்பட உள்ளது என புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது.