ஜியோ டவர்கள் தகர்ப்பு.. ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை.. முகேஷ் அம்பானி நீதிமன்றத்தில் மனு

 

ஜியோ டவர்கள் தகர்ப்பு.. ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை.. முகேஷ் அம்பானி நீதிமன்றத்தில் மனு

பஞ்சாபில் ஜியோ செல்போன் கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தியதையடுத்து, ஜியோவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு மற்றும் தனது பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடும்படி முகேஷ் அம்பானி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை நீக்கக்கோரியும் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் 40 நாட்களாக மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் நிலத்தை பறித்து கொள்ளும் என்று தவறான தகவல்கள் விவசாயிகள் மத்தியில் பரவியது.

ஜியோ டவர்கள் தகர்ப்பு.. ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை.. முகேஷ் அம்பானி நீதிமன்றத்தில் மனு
ஜியோ செல்போன் டவர்கள் சேதம்

இந்த சூழ்நிலையில் பஞ்சாபில் ஜியோவின் செல்போன் கோபுரங்களை கிளர்ச்சி விவசாயிகள் சேதப்படுத்தினர். இதனால் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் கார்ப்பரேட நிறுவனங்கள் மத்தியில் பஞ்சாப் மீதான நம்பிக்கையில் கேள்வியை எழுப்பியது. மேலும் அந்த மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பியது. இந்நிலையில் செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டதையடுத்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

ஜியோ டவர்கள் தகர்ப்பு.. ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை.. முகேஷ் அம்பானி நீதிமன்றத்தில் மனு
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்

ரிலையன்ஸ் ஜியோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அல்லது எந்தவொரு நிறுவனம் அல்லது துணை நிறுவனங்களுக்கும் எதிர்காலத்தில் ஒப்பந்த வேளாண்மை செய்ய விருப்பமும் இல்லை ஆர்வமும் இல்லை. கூட்டு நிறுவனமும், தனது சில்லரை நிறுவனங்களும் விவசாய நோக்கத்துக்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விவசாய நிலத்தையும் வாங்கவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணை நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒரு போதும் விவசாயிகளிடமோ அல்லது அவர்களின் விளைபொருட்களிலோ நியாயமற்ற நன்மைகளை பெற நுழைந்ததில்லை. எங்களது தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை பாதுகாப்பதற்கும், எங்களது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் அவசரமாக உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.