ரூ.2,500க்கு 5ஜி ஸ்மார்ட்போன்… முகேஷ் அம்பானி நிறுவனம் திட்டம்.. பயத்தில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள்..

ரூ.2,500க்கு 5ஜி ஸ்மார்ட்போன்… முகேஷ் அம்பானி நிறுவனம் திட்டம்.. பயத்தில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள்..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.2,500-3,000 விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் காலடி வைத்த பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஜியோவின் வருகைக்கு பிறகுதான் இலவச அழைப்பு மற்றும் மலிவு விலையில் டேட்டா கிடைக்க தொடங்கியது. ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை மூடின. தற்போது வி.ஐ., ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஜியோவின் போட்டியை சமாளித்து நிற்கின்றன.

ரூ.2,500க்கு 5ஜி ஸ்மார்ட்போன்… முகேஷ் அம்பானி நிறுவனம் திட்டம்.. பயத்தில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள்..
ஸ்மார்ட்போன்கள்

தற்போது நம் நாட்டில் செல்போன் பயன்படுத்துபவர்களில் 20 முதல் 30 கோடி பேர் 2ஜி தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை தன் வசம் இழுக்கும் நோக்கில், ரூ.5,000க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரூ.2,500க்கு 5ஜி ஸ்மார்ட்போன்… முகேஷ் அம்பானி நிறுவனம் திட்டம்.. பயத்தில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள்..
ஜியோ

ஜியோ நிறுவனம் 5ஜி சாதனத்தை ரூ.5,000க்கும் குறைவான விலையில் கொண்டு வர விரும்புகிறது. விற்பனை அதிகரிக்கும்போது அதன் விலை ரூ.2,500-3,000 என்ற அளவில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்போது நம் நாட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.25,000 என்ற அளவில் உள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் ரூ.2,500-3,000 விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை விற்பனை கொண்டு வர திட்டமிட்டுள்ளது பல செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.