6 மாதங்களுக்கு பிறகு ஏர்டெல்லை முந்திய ஜியோ… வாடிக்கையாளர்களை தொடர்ந்து இழக்கும் பி.எஸ்.என்.எல்.

6 மாதங்களுக்கு பிறகு ஏர்டெல்லை முந்திய ஜியோ… வாடிக்கையாளர்களை தொடர்ந்து இழக்கும் பி.எஸ்.என்.எல்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 42.6 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது.

நம் நாட்டில் வோடோபோன் ஐடியா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தனியார் நிறுவனங்கள்தான் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3ஜி நெட்வொர்க்கை வைத்து ஏதோ காலத்தை தள்ளி வருகிறது.

6 மாதங்களுக்கு பிறகு ஏர்டெல்லை முந்திய ஜியோ… வாடிக்கையாளர்களை தொடர்ந்து இழக்கும் பி.எஸ்.என்.எல்.
பார்தி ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் கடந்த பிப்ரவரி மாத தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. அதன்படி, 2021 பிப்ரவரி மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 42.6 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. தொடர்ந்து 6 மாதங்களாக புதிய இணைப்பு வழங்குவதில் முன்னணியில் இருந்த பார்தி ஏர்டெல் நிறுவனத்தை ஜியோ பின்னுக்கு தள்ளியது.

6 மாதங்களுக்கு பிறகு ஏர்டெல்லை முந்திய ஜியோ… வாடிக்கையாளர்களை தொடர்ந்து இழக்கும் பி.எஸ்.என்.எல்.
வோடாபோன் ஐடியா

பார்தி ஏர்டெல் அந்த மாதத்தில் 37.3 லட்சம் புதிய இணைப்புகளை கொடுத்துள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் 15 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.5 லட்சம் சந்தாதாரர்களை பெற்றுள்ளது. அதேசமயம் பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் அந்த மாதத்தில் சந்தாதாரர்களை இழந்துள்ளன. கடந்த பிப்ரவரி இறுதி நிலவரப்படி ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.49 கோடியாகவும், ஏர்டெலின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.83 கோடியாகவும், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.26 கோடியாக உயர்ந்துள்ளது.