Home வணிகம் ரூ.10,602 கோடி லாபம் ஈட்டிய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரூ.10,602 கோடி லாபம் ஈட்டிய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10,602 கோடி ஈட்டியுள்ளது.

பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, ரீடெயில் என பல்வேறு துறைகளில் வெற்றி கொடி நாட்டி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10,602 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.11,352 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அம்பானியின் தொலைத்தொடர்பு வர்த்தக நிறுவனமான ஜியோ கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,844 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் ஜியோ நிறுவனம் நிகர லாபமாக ரூ.990 கோடி ஈட்டியிருந்தது.

ஜியோ

2020 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.1.28 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்தது. அதேசமயம் 2020 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி என்ற அளவிலேயே இருந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,...

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல்- தொழிலதிபர் கைது

கோவை கோவையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய தனியார் மில் உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம்...
Do NOT follow this link or you will be banned from the site!