கணிப்புகளை தவிடு பொடியாக்கிய முகேஷ் அம்பானி… ரூ.13,248 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கணிப்புகளை தவிடு பொடியாக்கிய முகேஷ் அம்பானி… ரூ.13,248 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கச்சா எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு சேவை என பல்வேறு துறை வர்த்தகங்களில் கொடி கட்டி பறக்கும் முகேஷ் அம்பானி தலைமயிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.13,248 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும். மேலும் நிபுணர்களின் கணிப்புகளை காட்டிலும் அந்நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கணிப்புகளை தவிடு பொடியாக்கிய முகேஷ் அம்பானி… ரூ.13,248 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

2020 ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.1,00,929 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,74,087 கோடியாக உயர்ந்து இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் கடந்த காலாண்டில் உரிமை பங்கு வெளியீடு வாயிலாக ரூ.53,124 கோடி திரட்டியது. 2020 ஜூனில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லாத நிறுவனம் என்ற சாதனை படைத்தது.

கணிப்புகளை தவிடு பொடியாக்கிய முகேஷ் அம்பானி… ரூ.13,248 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,520 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 183 சதவீதம் அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபமாக ரூ.891 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. மேலும் கடந்த காலாண்டில் ஜியோவின் வருவாய் ரூ.16,557 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் வாயிலான மாதந்திர சராசரி வருவாய் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.140.3ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி, அந்நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 39.83 கோடியாக இருந்தது.