ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.13,227 கோடி ஈட்டியுள்ளது.

பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, ரீடெயில் என பல்வேறு துறைகளில் வெற்றி கொடி நாட்டி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.13,227 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 108.4 அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.6,348 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..
முகேஷ் அம்பானி

கடந்த மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.1,54,896 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.42 சதவீதம் குறைந்து ரூ.1,994.45ஆக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..
ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,508 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 47.5 சதவீதம் அதிகமாகும். மேலும் ஜியோவின் கடந்த மார்ச் காலாண்டு வருவாய் 18.9 சதவீதம் அதிகரித்து ரூ.18,278 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் ஜியோவின் ஒரு பயன்பாட்டாளர் வாயிலான ஒரு மாத சராசரி வருவாய் ரூ.138.20ஆக குறைந்துள்ளது. 2021 மார்ச் இறுதி நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 42.6 கோடியாக உயர்ந்துள்ளது.