ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.13,806 கோடி.. 4.23 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.13,806 கோடி.. 4.23 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.13,806 கோடி ஈட்டியுள்ளது.

பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, ரீடெயில் என பல்வேறு துறைகளில் வெற்றி கொடி நாட்டி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.13,806 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 66.7 சதவீதம் அதிகமாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.13,806 கோடி.. 4.23 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ
முகேஷ் அம்பானி

2020 ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.1.44 லட்சம் கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.31 சதவீதம் குறைந்து ரூ.2,077.70ஆக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.13,806 கோடி.. 4.23 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ
ஜியோ

2021 ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் ஜியோவின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 9.8 சதவீதம் உயர்ந்து ரூ.18,952 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் ரூ.3,651 கோடியாக உள்ளது. 2021 ஜூன் இறுதி நிலவரப்படி, ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 44.06 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் ஜியோ நிகர அடிப்படையில் 4.23 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.