3 மாதம்தான்… ரூ.14,894 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

 

3 மாதம்தான்… ரூ.14,894 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.14,894 கோடி ஈட்டியுள்ளது.

பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, ரீடெயில் என பல்வேறு துறைகளில் வெற்றி கொடி நாட்டி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.14,894 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 40.5 அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.10,602 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

3 மாதம்தான்… ரூ.14,894 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி

கடந்த டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் 6.7 சதவீதம் உயர்ந்து ரூ.1,23,997 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.1,16,195 கோடியாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் 2.30 சதவீதம் குறைந்து ரூ.2,049.65ஆக இருந்தது.

3 மாதம்தான்… ரூ.14,894 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,489 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 15.5 சதவீதம் அதிகமாகும். மேலும் ஜியோவின் கடந்த டிசம்பர் காலாண்டு வருவாய் 5.3 சதவீதம் அதிகரித்து ரூ.19,475 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் ஜியோவின் ஒரு பயன்பாட்டாளர் வாயிலான ஒரு மாத சராசரி வருவாய் ரூ.151ஆக அதிகரித்துள்ளது. 2020 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 41.0 கோடியாக உள்ளது.