ரிலையன்ஸ் – ஃபியூச்சர் குழும ஒப்பந்தத்துக்கு அனுமதி!

 

ரிலையன்ஸ் – ஃபியூச்சர் குழும ஒப்பந்தத்துக்கு அனுமதி!

ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் பியூச்சர் குழும ஒப்பந்தத்துக்கு போட்டி
ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
பியூச்சர் நிறுவனத்தின் பங்குகளை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் வாங்கியது தொடர்பாக அமேசான் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது. பியூச்சர் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்துள்ள காரணத்தால் தொடர்பான இந்த ஒப்பந்தத்துக்கு அமேசான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிரானது எனக் கூறியதுடன், போட்டி ஒழுங்கு முறை ஆணையதிலும் புகார் அளித்தது. 340 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் போட்டி ஒழுங்கு முறை ஆணைய விசாரணைக்கு சென்றதுடன், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கும் அமேசன் புகார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் – ஃபியூச்சர் குழும ஒப்பந்தத்துக்கு அனுமதி!

இது தொடர்பான வாதம் நடைபெற்ற நிலையில், கொரோனா ஊடரங்கு காரணமாக வர்த்தகம் முடங்கிய நிலையில், முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தாக பியூச்சர் குழுமம் ஒழுங்கு முறை ஆணையத்தின் தெரிவித்திருந்தது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்தியாவில் மிக வேகமாக தங்கள் விற்பனை நெட்வொர்க்கை வளர்ந்து வருகிறது .இதையொட்டி பிச்சர் குடும்பத்துடன் பங்குகளை 340 கோடி டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.