நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

 

நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

திருத்தம் மேற்கொள்வதற்காக வரைவு வக்காளர் பட்டியல் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்த அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி நவம்பர் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் செய்வதற்கான படிவங்களை வாக்காளர்கள் வழங்கலாம். அதற்கான சிறப்பு முகாம் முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

புதிதாக பெயர் சேர்க்க www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் VOTER HELP LINE என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 20ஆம் தேதி வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.