கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பா? திருச்சி மங்கள் & மங்கள் நகைக் கடையில் அதிகாரிகள் சோதனை

கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பா? திருச்சி மங்கள் & மங்கள் நகைக் கடையில்  அதிகாரிகள் சோதனை

திருச்சியில் மங்கள் & மங்கள் நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்க துறை துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அந்த நகை கடையில் தங்கம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது? வாங்கிய தங்கத்திற்கு முறையான ரசீது உள்ளதா? விமானம், கப்பல் போன்றவற்றில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை வாங்கி விற்பனை செய்கிறார்களா? என்பன போன்ற சோதனைகள் நடைப்பெற்று வருகிறது.

கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பா? திருச்சி மங்கள் & மங்கள் நகைக் கடையில்  அதிகாரிகள் சோதனை
கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பா? திருச்சி மங்கள் & மங்கள் நகைக் கடையில்  அதிகாரிகள் சோதனை

இன்று மதியம் என்.எஸ்.பி சாலையில் உள்ள அந்த கடைக்கு வந்த 15 அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் நகைகள் குறித்து ஆய்வு செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல அந்த கடையில் வாங்கப்பட்ட நகைகள் மற்றும் விற்பனை செய்யப்பட்ட நகைகளுக்கு முறையாக ஜி.எஸ்.டி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஜி.எஸ்.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பா? திருச்சி மங்கள் & மங்கள் நகைக் கடையில்  அதிகாரிகள் சோதனை

கேரளா தங்க கடத்தல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல். கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்ட கும்பலுக்கும் இந்த கடைக்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.