இயக்குநர் சிறுத்தை சிவாவின் தந்தை காலமானார்!

 

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தந்தை காலமானார்!

தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரான சிறுத்தை சிவா, ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றமையால் சிறுத்தை சிவா என்றும் அழைக்கப்படுகிறார். நடிகர்அஜித் குமார் நடிப்பில் இவர் இயக்கிய வீரம் திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. பின்னர் இவர் மீண்டும் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்றிய வேதாளம் திரைப்படமானது, 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மூன்றாவது முறையாக அஜித்குமார் மற்றும் சிவா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான விவேகம் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றபோதிலும் நல்ல வருவாய் ஈட்டியது. அதன்பின் சிறுத்தை சிவா- அஜித் கூட்டணி பரவலாக பேசப்பட்டது. காரணம் அவர் அஜித்தை வைத்து வீரம், விசுவாசம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தந்தை காலமானார்!

சென்டிமெண்ட் காட்சிகளை அள்ளித்தூவி குடும்ப படத்தின் ரசிகர்களை தனக்கென வைத்திருக்கும் சிறுத்தை சிவாவின் தந்தை, ஜெயக்குமார் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இவரின் தந்தை ஜெயக்குமார் டாக்குமெண்டரி போட்டோக்ராபர். இவரது தாத்தா வேலன் பிரபல தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் அசிஸ்டன்ட் கேமராமேனாக சேர்ந்தார். இவரது குடும்பமே திரைத்துறையில் சம்பந்தப்பட்ட குடும்பம் என்பது குறிப்பிடதக்கது.