பப்ஜி மதன் மீதான குண்டாஸை நீக்க மறுப்பு!

 

பப்ஜி மதன் மீதான குண்டாஸை நீக்க மறுப்பு!

பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்தது.

பப்ஜி மதன் மீதான குண்டாஸை நீக்க மறுப்பு!

யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடிய மதன் என்பவர் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதன் காரணமாக பப்ஜி மதனுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதன் , நாங்கள் தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடவில்லை. கொரியா வெர்ஷனை தான் விளையாடினோம். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு தவறு செய்யவில்லை. சாதாரண பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என வாதித்தார்.

பப்ஜி மதன் மீதான குண்டாஸை நீக்க மறுப்பு!

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்தது. ஜூலை 6 இல் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அதை நீக்கமுடியாது என்று அறிவுரைக் கழகம் கூறியள்ளது. தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கக் கோரி இருந்தார் மதன் வாதாடியிருந்தார். குண்டர் சட்டத்தை எதிர்த்து மதன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ள நிலையில், குண்டர் சட்டம் போடப்பட்டதை அறிவுரைக்கழகம் உறுதி செய்தது.