நடுவானில் ரஃபேலுக்கு எரிபொருள் நிரப்பல்! – வைரல் ஆன புகைப்படம்

 

நடுவானில் ரஃபேலுக்கு எரிபொருள் நிரப்பல்! – வைரல் ஆன புகைப்படம்

இந்தியாவுக்கு வந்துகொண்டிருக்கும் ரஃபேல் போர் விமானத்துக்கு பிரான்ஸ் விமானப்படை டாங்கி விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

நடுவானில் ரஃபேலுக்கு எரிபொருள் நிரப்பல்! – வைரல் ஆன புகைப்படம்
இந்தியாவின் வான்படை வலிமையை அதிகரிக்க பிரான்சிடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஐந்து போர் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது. பிரான்சில் புறப்பட்ட விமானங்கள் நேராக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வருகின்றன. எமிரேட்ஸ் வரும் வரையில் விமானத்துக்கு தேவையான எரிபொருளை நிரப்பும் பொறுப்பை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டது.

நடுவானில் ரஃபேலுக்கு எரிபொருள் நிரப்பல்! – வைரல் ஆன புகைப்படம்
அந்த வகையில் ரஃபேல் போர் விமானங்கள் விண்ணில் பறக்கும் நிலையில் பிரான்ஸின் எரிபொருள் டாங்கர் விமானம் மூலம் நடு வானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. ரஃபேல் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்படும் காட்சிகளை விமானப்படை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் ரஃபேல் அங்கு ஒரு நாள் ஓய்வெடுக்கும். மீண்டும் போதுமான அளவு எரிபொருள் நிரப்பப்பட்டு புறப்படும் விமானம் நாளை (29ம் தேதி) ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.