மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு!

 

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு!

காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் சரியான பருவத்தில் தொடங்க, மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்க வேண்டும். இந்தாண்டு திறக்கப்பட்டும் இன்னும் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்ல வில்லை. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயப் பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து சற்று அதிகரித்த நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதே போல காவிரி டெல்டா பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு!

இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.