மதுரையில் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு! – வணிகர்கள் சங்கம் முடிவு

 

மதுரையில் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு! – வணிகர்கள் சங்கம் முடிவு

மதுரையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வது என்று வியாபாரிகளாக முன்வந்து அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மதுரையிலும் ஊரடங்கை அறிவித்து பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசும் மதுரையில் ஊரடங்கை அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மதுரையில் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு! – வணிகர்கள் சங்கம் முடிவுஇந்த நிலையில் நமக்கு நாமே என்ற வகையில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எனக் குறைத்துக் கொள்வது என்று வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாளை மறுதினம் முதல் மதுரையில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

மதுரையில் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு! – வணிகர்கள் சங்கம் முடிவுவியாபாரிகள் சங்கங்களின் முடிவை மதுரை மக்கள் வரவேற்றுள்ளனர். கொரோனாத் தொற்றுக்கு முடிவு வந்தால் போதும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.