• December
    06
    Friday

Main Area

Main



48 மெகா பிக்சல் ரியர் கேமரா கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

redmii
redmii

டெல்லி: ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7 சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அந்நாட்டில் மூன்று வாரங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமான யூனிட்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேகி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

mi

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999 முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 3 ஜிபி, 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் வகைகள், 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி, 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, யு.எஸ்.பி டைப்-சி, குயிக் சார்ஜ் 4.0, 48 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, ஏ.ஐ வசதி, 13 எம்.பி. செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.