• December
    06
    Friday

Main Area

Main



சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது

redmi
redmi

மும்பை: சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரெட்மி பை சியோமி என்ற புதிய சப் பிராண்டை சியோமி நிறுவனம் தொடங்கிய பின்பு அந்நிறுவனம் கீழ் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. கூடிய விரைவில் சர்வதேச அரங்கில் இது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ஒரே மாதத்தில் சுமார் 10 லட்சம் எண்ணிக்கையிலான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களை விற்க சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சீனாவில் அறிமுகமானதை தொடர்ந்து விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்ஷனான ரெட்மி நோட் 7 ப்ரோ சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசசர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, க்விக் சார்ஜ் 4 பிளஸ் தொழில்நுட்பம், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகிய வசதிகள் இடம்பெறலாம் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பிராசஸரில் குவால்காமின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 1499 (இந்திய மதிப்பில் ரூ.15,800) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியன்ட் விலை CNY 999 (இந்திய மதிப்பில் ரூ.10,500) என்றும், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் CNY1199 (இந்திய மதிப்பில் ரூ.12,600) என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி விலை CNY 1399 (இந்திய மதிப்பில் ரூ.14,700) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.